சிம்புவை துரத்தும் வம்பு! குட்டி குஷ்பு தான் காரணமா?

3525

தமிழக சினிமாவில் கிசுகிசுகளுக்கு பெயர் பெற்றவர் நடிகர் சிம்பு. இவர் மீது பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்து வந்தது.

இதனால் சில காலங்களுக்கு அமைதியாக இருந்த சிம்பு, சமூக பிரச்சனைகளை தன்னை இணைத்துக் கொண்டு, நல்ல பிள்ளை என்று பெயர் எடுத்து வந்தார். இவ்வாறு இருக்கையில், தற்போது 90 எம்.எல். என்ற படத்தின் மூலம் கெட்டப் பெயர் கிடைத்துள்ளது.

இதனிடையே சிம்பு அடுத்த ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டுள்ளாராம். அது என்னவென்றால், நடிகை ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் இருந்தே, மதம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. தற்போது, சிம்புவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த விஷயத்தை சிம்பு பாணியில் சொல்ல வேண்டும் என்றால், “நம்ம யாருக்கும் ஆப்பு வைக்கிறது இல்ல. எல்லா ஆப்பும் அங்க அங்க தான் இருக்கு. நம்ம தான் அத தேடி ஓடி சும்மா ஜம்ப் பன்னி உட்காரோம்” என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of