பிளாக்பஸ்டர் பட இயக்குநர் படத்தில் நடிகர் சிம்பு..!

1026

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார் நடிகர் சிம்பு. இவர், நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி, பத்து தல, மாநாடு ஆகிய திரைப்படங்களிலும் மும்மரமாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இறுதிச்சுற்று, சூரறைப் போற்று ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்காராவுடன், நடிகர் சிம்பு இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement