“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..!

593

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ராம், நித்யா மேனன், சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ள படம் சைகோ. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் மையக்கரு, புத்தரின் அங்குலிமாலா என்ற கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் புரோமோஷனுக்காக, படத்தில் நடித்தவர்கள் பல்வேறு யு டுயூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கம் புலி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், இயக்குனர் மிஸ்கின் சிறந்த மனிதன். உடன் வேலை செய்பவர்களை மனம் திறந்து பாராட்டுவதில் பாரபட்சம் பார்க்காதவர் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டிக்-டாக் ஆப் பற்றி பேசத்தொடங்கினார்.

அதில், எனக்கு அந்த ஆப் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷத்தை தந்தது. நான் அதிக நேரம் அதில் செலவழித்தேன். என்னை போலவே ஒருவர் டிக்டாக் செய்வதை கண்டு வியந்து நேரில் அழைத்து பாராட்டினேன்.

ஆனால் கடைசியில் அந்த பையனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது. அப்புறம் அந்த பையன் என்னை போலவே சினிமாவில் நடித்து வருகிறான். ‘என்னடா இது நமக்கு நாமே சூனியம்’ வைத்தது போல் ஆகிவிட்டது என்று கூறினார்.

Advertisement