“பிரேத பரிசோதனை செய்யும் வேலை செய்தார்..” வடிவேல் பாலாஜி பற்றி உருக வைக்கும் தகவல்..!

1459

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேல் பாலாஜி. பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்த இவர், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவரோடு இணைந்து பணியாற்றிய இனிமையான தருனங்களையும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், வடிவேல் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பற்றி கூறினார்.

மேலும், அவரது குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக, வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, நேற்று அவரது இறுதி சடங்கின்போது, நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

இவர்கள் மட்டுமின்றி, வடிவேல் பாலாஜியுடன் பணியாற்றிய, மைனா, ரோபோ சங்கர், தங்கதுரை, ராமர் போன்றோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், அது இது எது நிகழ்ச்சியின் இயக்குநரான தாம்சன், வடிவேல் பாலாஜி பற்றி உருக்கமான செய்தியை தெரிவித்திருக்கிறார்.

அதாவது, வடிவேல் பாலாஜி தனது தொடக்க காலங்களில், பிரேத பரிசோதனை செய்யும் வேலையை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனதளவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரேத பரிசோதனை வேலையை செய்துவிட்டு, டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பலரும் சிரிக்கும்படியான காமெடியை செய்து அசத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து 7 வருடங்கள் வரை இந்த வேலையை அவர் செய்தார் என்றும், கடந்த சில வருடங்களாக மட்டும் தான் அந்த வேலையை விட்டுவிட்டு, நடிப்பில் முழுகவனம் செலுத்தி வந்தார் என்றும் இயக்குநர் தாம்சன் கூறியிருக்கிறார்.

சினிமாவில் பெரிய காமெடி நடிகராக வரவேண்டும் என்ற கனவை அடையும் முன்னரே, இறைவனடி சேர்ந்துவிட்டார். இருப்பினும், அனைவரது உதடுகளிலும் சிரிப்பு இருக்கும் வரை.. இவரும் இருப்பார்..