
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில், பூசாரியாக நடித்து பிரபலம் அநை;தவர் தவசி. அதுவும், அந்த படத்தில் அவர் பேசிய, கருப்பன் ரொம்ப குசும்புக்காரன் என்ற வசனம் பலரையும் ரசிக்க வைத்தது.
இந்த படத்தையடுத்து, சிறிய கதாபத்திரங்கள் பலவற்றில் நடித்த இவர், ரஜினியின் அண்ணாத்த படத்திலும் கடைசியாக நடித்திருக்கிறார்.
காது வரைக்கும் மீசை, தாடி என்று மிகவும் கம்பீரமாக இருக்கக்கூடிய தவசி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.
மேலும், தனக்கு பிரபலங்கள் உதவ வேண்டும் என்று உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனைபார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.