பிரபல நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்.

857

பிரபல நடிகர் டைப்பிஸ்ட் கோபு சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.

தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு. 1965 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய ’நாணல்’ எனும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதே கண்கள், எங்க மாமா, பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, வா ராஜா வா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சிம்லா ஸ்பெஷல், கற்பூரம், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, ஒரு கைதியின் டைரி உட்பட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

டைப்பிஸ்ட் கோபுவின் இயற்பெயர் கோபால ரத்தினம். 1959-ல் ’நெஞ்சே நீ வாழ்க’ எனும் நாடகத்தில் ’டைப்பிஸ்ட் கோபு’ எனும் கேரக்டரில் நடித்ததால், அந்த பெயர் நிலைத்து நின்றுவிட்டது.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள இவர், உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of