இந்தியாவின் வில்லன் மோடி! உதயநிதி கடும் தாக்கு!

581

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம சிகாமணிக்கு ஆதரவாக சேலம் உடையாப்பட்டியிலும், வாழப்பாடியிலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது:-

“தமிழகத்துக்கு கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் போது ஒருமுறை கூட வராத மோடி, தற்போது வாக்குகளுக்காக தமிழகத்துக்கு 4 முறை வந்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ.

அதைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். தேர்தலில் ஹீரோ என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார்.

இந்தியாவின் வில்லன் மோடிதான்.
அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும், தேமுதிகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது சீட்டுக்காகவும், ஓட்டுக்காகவும்தான்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை வெளிநாட்டு பயணம் மட்டும் தான்”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of