மிஷ்கினுக்கே தெரியாமல் இப்படி நடித்தேன்..! சீக்ரெட்டை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்..!

473

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ராம், நித்யா மேனன், அதிதி ராவ் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் சைகோ. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பி.சி. ஸ்ரீ-ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் படத்தின் புரோமோசனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தான் பார்வையற்றவராக நடித்தப்போது ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்வு குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:-

“இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தில் நாயகன் லென்ஸ் அணிந்து நடித்ததாக கேள்விப்பட்டேன். தேடி பிடித்து அந்த லென்சை வாங்கி போட்டு வீடியோ எடுத்து மிஷ்கினுக்கு அனுப்பினேன்.

ஆனால் அவர் சூப்பர் என்று சொல்லிவிட்டு இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கண்ணாடி அணிந்தால் போதும் என்று சொன்னார்.

ஆனால் அவருக்கே தெரியாமல் சில காட்சிகளில் அந்த லென்ஸ் அணிந்து நடித்தேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of