வெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..! இவர் தான் இயக்குநர்..!

355

தமிழ் சினிமாவின் மிகமுக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர் வைகைப் புயல் வடிவேலு. புல்லட் பாண்டி, கைப்பிள்ள, நாய் சேகர் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், சில காரணங்களால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர், கத்திச் சண்டை படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர், விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்தார். பின்னர், இயக்குநர் சங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படத்தில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது, அனைத்து பிரச்சனைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில், இயக்குநர் சுராஜுடன் வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் சுராஜ், இதுவரை தலைநகரம், மருதமலை, படிக்காதவன், கத்திச் சண்டை உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கியிருக்கிறார். இந்த இருவரும் இணைய இருப்பதால், அந்த வெப் தொடரின் மீதான எதிர்பார்ப்பு சற்று தூக்கலாகவே இருக்கிறது.

Advertisement