வடிவேலுக்கு அப்புறம் இவர் தான்? போட்டி போடும் தயாரிப்பாளர்கள்!

1199

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஜோடி திரைப்படங்களில் அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கும்பலில் ஒருவராக நடிகர் ராஜ்கிரண் மூலம் அறிமுகப்படுத்தபட்டவர் தான் வடிவேலு.

இவர் தனது பாடி லேங்குவேஜ் காமெடி மூலம் புதிய டிரெண்டை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார்.

இவர் ஒரு படத்தில் இருந்தாலே அந்த படத்தை காண்பதற்கென ஒரு தனிப்பட்டாளம் இருக்கும்.

இவ்வாறு காமெடி உலகில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருந்த வடிவேலு, சமீப காலமாக திரையில் தோன்றுவது குறைந்துள்ளது.

இந்நிலையில் வடிவேல் நாயகனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தர்ம பிரபு படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

தர்மபிரபு படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement