ஷங்கர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர்! வைகை புயல் ஆதங்கம்!

1081

சிவில் இன்ஜினியரிங் லேனர்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, விக்னேஷ் என்பவர், இதன் பெயர் சுத்தியல், இதை தட்டினால் டங்-டங் என்ற சத்தம் கேட்கும்.

பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என நகைச்சுவையாக கூறினார். இவருக்கு பதில் சொன்ன அவரது நண்பர்கள், நேசமணி இப்ப எப்படி இருக்காரு, அவருக்கு எதுவும் ஆகலையா என சொல்லி பிரே ஃபார் நேசமணி என்ற ஆஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்கினர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது பின்வருமாறு:-

“நேசமணி ட்ரெண்டானது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. 24-ம் புலிகேசி படத்தை சிம்புதேவன் இயக்குகிறாரா அல்லது சங்கரா என தெரியவில்லை. சங்கர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர்.

காமெடி படம் குறித்து அவர் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? இப்படத்தில் என்னுடைய உண்மையான நடிப்பை அவர்கள் எதிர்பர்க்கவில்லை.

இவர்கள் என்னை நடிக்க விடவில்லை என்றாலும் எனக்கு என்ட் கார்டே கிடையாது. என் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும்..,”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement