பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..

2196

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சீரியலில், 3 தம்பிகளில் ஒருவராக நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

இந்த அழைப்பு வருவதற்கு, ஷேபா மேம் தான் காரணம். எஸ்.ஏ.சி அவர்கள், அவரது அடுத்த படத்திற்காக ஹீரோவை தேடிக்கொண்டு இருந்தார். அப்போது, ஷோபா மேம் தான் என்னை பரிந்துரை செய்தார்.

அதற்காக ஷோபா மேமிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விஷயமெல்லாம், ஊரடங்கு காலத்திற்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால், வைரஸ் தொற்றால், அது தடைப்பட்டது. இதேபோன்று, தளபதி விஜயை ஒரு முறை பார்க்க வேண்டும்.”

இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.