நடிகர் விஜய் வீட்டில், வருமான வரித்துறையினர் கைப்பற்றியது என்ன..?

224

வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஏ.ஜி.எஸ் குழுமம், நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 38 இடங்களில், அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.

அன்புச்செழியன் மற்றும் நண்பரின் வீடு ஆகிய இடங்களில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.