சிரஞ்சீவி வீட்டு மருமகனாகும் விஜய் தேவரகொண்டா?

2212

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெலுங்கு திரையுலகில் பேச்சு கிளம்பியுள்ளது.

தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிஹாரிகா விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்.

இதை சிரஞ்சீவி குடும்பத்தாரோ, விஜய் தேவரகொண்டாவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

Advertisement