ராணுவ வீரருக்கு போன் செய்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ

1298

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன்.இவர் ராணுவ வீரராக இருக்கிறார். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்களில் இவரும் ஒருவர்.

காஷ்மீரில் உள்ள பதற்றமான சூழ்நிலையில், அவர் குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் பாதுகாப்பு பணிக்கு செல்ல தயாராகியுள்ளார்.

அவர் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவருடன் போனில் இதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி அறிந்த தளபதி விஜய் தமிழ்செல்வனை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

‘ நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் .உங்களுக்கு எதுவும் ஆகாது.வெற்றியுடன் திரும்புவீர்கள்.திரும்பி வந்தவுடன் உங்களை நான் சந்திக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.