பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விஜய்சேதுபதி..? கைது செய்யப்படுவாரா..?

1429

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர், தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில், விஜய்சேதுபதி பட்டாக் கத்தியால் கேக்கினை வெட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர், இதற்கு முன் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியவர்கள் கைது செய்யப்பட்டதைப் போன்று, விஜய்சேதுபதியும் கைது செய்யப்படுவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் விஜய்சேதுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளேன். அந்த படத்தில், புகைப்படத்தில் இருக்கும் வாள் முக்கிய கதாபாத்திரமாக உள்ளது.

ஆகையால், அந்த படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது, அதே பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டினேன். இந்த சம்பவம், யாருடைய மனதையாவது புன்படுத்தும்படி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement