“மீண்டும் ஒரு ப்ராஜெக்ட்.. ஆனா இந்த முறை..” அசரவைக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நட்பு..!

315

பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், பர்ஸ்ட் லுக், செகன்ட் லுக் வெளியாகி அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

எனவே இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்தவர்கள் போன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களது நட்பு இந்த திரைப்படத்தில் மட்டுமின்றி, எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் திரைப்படங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, நடிகர் விஜய்சேதுபதி இயக்க இருக்கும் திரைப்படத்தில், விஜய் நடிக்கும் அளவிற்கு இவர்களின் நட்பு அதிகரித்துள்ளதாம்.

சிறிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் விஜய்சேதுபதி, சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் நபர்களை தேர்வு செய்து, திரைப்படங்களை எடுத்து வந்தார். ஆனால், அதில் எந்தவொரு திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை.

இதனால், நடிகர் விஜயை வைத்து மீடியம் பட்ஜெட் படத்தை எடுக்க விஜய்சேதுபதி முடிவு எடுத்திருக்கிறாராம். அந்த படத்தை விஜய்சேதுபதியே இயக்கவும் உள்ளாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், இதுகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என்று நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of