“கொரோனாவுக்குலாம் பயப்பட முடியாது..” விக்ரம் எடுத்த பெரும் ரிஸ்க்..!

739

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களையும் பலிவாங்கியுள்ளது.

இதனால், பல்வேறு நாடுகள் தங்களது விமான நிலையங்களில் ஒரு மருத்துவ குழுவை நியமித்து, நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கு சோதனை நடத்திய பிறகே அனுமதிக்கின்றனர்.

உலகம் முழுவதும் நிலைமை இவ்வாறு இருக்க, நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர், படப்பிடிப்பு நடத்துவதற்காக, ரஷ்யா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

ரஷ்யாவில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவில் 15-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement