நிம்மதி அடைந்த கமல் வேட்பாளர்கள்! துருக்கி சென்ற விஷால்!

887

விஷால் – தமன்னா இருவரும் சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படக்குழு துருக்கிக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது. இதில் கலந்துகொள்ள விஷாலும் தமன்னாவும் துருக்கி கிளம்புகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைகளில் நடிகர் விஷாலுக்கு ஆதரவாகவே கமல் பெரும்பாலும் பேசி வந்த நிலையில், விஷால் வரும் பாராளுமன்ற,சட்டசபை இடைத்தேர்தல்களில் கமல் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதாக பலமான வதந்திகள் நடமாடி வந்தன.

இதனால் மநீம வேட்பாளர்கள் பெரும் பீதியில் இருந்தனர். தற்போது அவர் படப்பிடிப்புக்காக தமன்னாவுடன் துருக்கி செல்வதால் பிரச்சாரத்து வரமாட்டார் என்பது உறுதியாகியிருக்கிறது. இச்செய்தியால் கமல் வேட்பாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.