ரஜினி-கமல் கூட்டணி? பிரபல நடிகர் யோசனை!!

479

பாராளுமன்றத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடப்போவதில்லை. சட்டமன்றத்தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று சூப்பர் ஸ்டார் திடீர் யு டர்ன் அடித்த நிலையில் அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்தின் ‘உடல்நலம்’ குறித்து விசாரிக்கச் சென்றபோது அவர் பா.ஜ.க.வின் தூதுவராக மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டார்.

இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது ஆண்டுவிழாவுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பினார்.

நேற்று சென்னை விமான நிலைய சந்திப்பின்போது பத்திரிகையாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் தனது கட்சிக்கு ஆதரவளிக்கும்படி ரஜினியிடம் வேண்டுகோள் வைப்பதில் தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில்,

‘கமல் சாரும் ரஜினி சாரும் இணையவேண்டும். நடிகர் சங்க நட்சத்திர விழாவுக்கு அல்ல. ஒரு மல்டி ஸ்டார் படத்துக்காக அல்ல. வேறு எதற்காகவும் அல்ல, ஆனால் 2019 பாராளுமன்றத் தேர்தலுக்காக. இவர்கள் இருவரும் இணைந்தால் தேர்தல் முடிவுகளில் ஒரு பெரும் திருப்பம் இருக்கும்’

என்று பதிவிட்டிருக்கிறார்.