இயக்குநராகும் விவேக்! முன்னனி நடிகர் தான் ஹீரோவா?

572

நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வெள்ளை பூக்கள். விவேக் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் விவேக் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

“விரைவில் ஒரு படம் இயக்க போகிறேன். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகைச்சுவை படமாக இருக்கும். முன்னணி கதாநாயகர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்.

நான், வடிவேலு போன்றோர் நடிக்கும் வரை படங்கள் இரண்டரை மணி நேரத்தை தாண்டி ஓடும்.

எனவே எங்களுக்கு நகைச்சுவைக்காக தனி டிராக் கிடைக்கும். ஆனால் இப்போது 2 மணி நேரம் ஒரு சினிமாவில் ரசிகர்களை அமர வைப்பதே சவாலாக இருப்பதால் அதற்கும் குறைவான படங்களே உருவாகின்றன.

எனவே தற்போது வெளியாகும் படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை”

என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of