விவேக் அரசியல் கட்சியில் இணைகிறாரா? அவரே விளக்கம் தருகிறார்!

581

சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலமாகவே மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்பவர் நடிகர் விவேக். அவர் சமூக அக்கறையுடன் மேலும் பல விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் விவேக் அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்கிற வதந்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விவேக் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு:-

“இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன்.

ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள்.

வதந்திகளை நம்ப வேண்டாம்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.