படவாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்..! விசாரணையில் பகீர் தகவல்..!

907

பெண்களுக்கான பாதுகாப்பு நாடு முழுவதும் கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து வயதுடைய பெண்களுக்கும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது மிகவும் கசப்பான ஒரு விஷயம்.

பெண்களுக்கு அனைத்துதுறைகளிலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், குறிப்பாக சினிமாதுறையில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.

இதனால் நடிகைகளுக்காக போராடும் நோக்கத்தில் மலையாள பட உலகை சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை 2017-ம் ஆண்டு தொடங்கினர்.

இந்த அமைப்பு மலையாள பட உலகில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநியாயங்கள் பற்றியும், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட பினராயி விஜயன், விசாரணை கமிஷன் ஒன்றை உருவாக்கி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, மலையாள பட உலகில் உள்ள நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நடிகைகள், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், ஒரு சிலர் பயத்தின் காரணமாக பேசவே மறுத்து விட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளங்களில் கழிவறை, உடை மாற்றும் அறை வசதிகள் கூட பெண்களுக்கு செய்து தரப்படுவதில்லை என்றும் புகார் கூறி உள்ளனர். இந்த அவல நிலையில் இருந்து நடிகைகளுக்கு நிரந்தர தீர்வு தேடித்தர விசாரணை கமிஷன், கேரள அரசுக்கு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. இந்த அறிக்கையை கேரள அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement