“மீண்டும் அமலா” – களமிறங்கும் நாகர்ஜுனா மனைவி | Actress Amala is Back

934

திரிஷா, நயன்தாரா, சிம்ரன், ஜோதிகா என்று பல நடிகைகள் உச்ச நட்சத்திரமாக வலம்வந்த காலத்திற்கு முன்பே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்கள் பல. அதில் முக்கியமான ஒருவர்தான் அமலா. இவர் நடிப்பை விட்டு விலகி பல ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சர்வானந்த் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து வருகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

1991-ல் பாசில் இயக்கத்தில் வெளியான கற்பூரமுல்லை படம்தான் அமலா தமிழில் நடித்த கடைசி படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு இப்போது அவர் தமிழில் ரீஎன்ட்ரியாகிறார்.