விஷாலை எட்டி உதைத்த பிரபல நடிகை! இதுக்கெல்லாம் காரணம் இந்த இயக்குநரா?

611

முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகவும் டாப் ஹீரோயினாக ஜொலித்த நடிகை அமிபிகா, தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

இதில் அவருக்கு சில புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் ஒன்று விஷாலும், அம்பிகாவும் நடித்த அவன் இவன் படத்தின் புகைப்படம். இந்த படத்தில் விஷாலை எட்டி உதைக்கும் காட்சியும் இருந்தது.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பேசிய அவர், நான் தயங்கிக்கொண்டே விஷாலிடம் சங்கடமாக இருக்கிறது என்றேன், ஆனால் அவர் பரவாயில்லை உதையுங்கள் என்றார்.

மேலும் இயக்குனர் பாலாவும் அதெல்லாம் விஷால் ஒன்றும் நினைக்க மாட்டார் நீங்கள் உதையுங்கள் என கூறினார்.

இதனால் நானும் ஓங்கி எட்டி உதைக்க விஷால் உண்மையிலேயே உருண்டு விழுந்துவிட்டார். பேச்சுக்காக சொன்னால் இப்படியா என ஃபீல் பண்ணார் என்று அம்பிகா தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of