ஹீரோயின்களுக்கு வரும் விபரீத ஆசை! ஏற்றுக்கொள்வார்களா சினிமா ரசிகர்கள்?

601

ஹீரோயின், வில்லி என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்தி வருபவர் வரலட்சுமி சரத்குமார். அதிலும் குறிப்பாக வில்லத்தனம் செய்வதில் அவர் ஸ்பெஷலிஸ்டாக உள்ளார்.

இந்நிலையில் சில ஹீரோயின்களுக்கும் வில்லியாகும் ஆசை வந்துள்ளது. சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரமாம்.

வித்தியாசமாக ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்த தமன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளார். இதை நம் முந்திய செய்தியிலேயே பார்த்திருப்போம்.

இவரைத் தொடர்ந்து ஒரே மாதிரி நடித்து போர் அடிக்கிறது என்று அடிக்கடி கூறி வந்த காஜல் அகர்வாலும் வில்லியாக மாறியுள்ளார். சீதா என்கிற தெலுங்கு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் காஜல்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் எதிர்மறையானது என்று கூறப்படுகிறது.

இவர்களின் இந்த கதாபாத்திரங்களை சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of