மகனோடு காங்கிரஸில் இணைந்த நடிகை.

527
jayasudha8.3.19

தெலுங்குதேச கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஜெயசுதா தனது மகன் நிகர் கபூர்வுடன் நேற்று யுவஜனா சரமிக்க ரித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முன்பாக அக்கட்சி தலைமையகத்தில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயசுதா, திரு. ஜெகன் மோகன் ஆந்திராவின் முதலமைச்சர் ஆவர் என்றும், அதற்காக கடினமாக உழைப்பேன் என்றும் கூறினார், மேலும் அவர் கூறுகையில் மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வந்தது போல உணர்கின்றேன் என்று கூறினார்.