சரவணனுக்கு கெட் அவுட்..! கஸ்தூரிக்கு கட் அவுட்..! பிக்-பாஸ் அதிரடி..!

642

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுலை மாதம் வெளியாகி, தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில், பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைல்ட் கார்டு என்ரியில் நடிகை கஸ்தூரி பிக்-பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு பெண்களை இடித்ததாக கூறியதே காரணம் என்று அவர் வெளியேற்றப்பட்டார்.

ஆனால் அதற்கு வேறு சில காரணங்களும் உள்ளது என்று சமூக வலைதளங்களில் சில கருத்துகள் உலா வரும் நிலையில், தற்போது கஸ்தூரி என்ரி கொடுத்துள்ளார்.

சரவணன் வெளியானதால் பிரச்சனைகளுக்கு பஞ்சம் ஏற்படும் என்ற நோக்கில் கஸ்தூரி பிக்-பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of