இந்த அவமானம் தேவையா உங்களுக்கு..? மரண மொக்கை வாங்கிய கஸ்தூரி..! வச்சி செய்த ஹவுஸ்மேட்ஸ்..!

2220

பிக்-பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை பல்வேறு பரபரப்புகளுடன், சென்றுக்கொண்டிருக்கிறது. நம் எதிர்பாராத பல்வேறு விஷயங்கள் இந்த சீசனில் அடிக்கடி நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சரவணன் யாரும் எதிர்பாராத விதமாக பிக்-பாஸ் வீட்டில் இருந்து நீக்கப்பட்டார்.

சரவணன் நீக்கப்பட்டதால், சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்-பாஸ் தனது அடுத்த மாஸ்டர் பிளானை நடத்தினார். சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை கஸ்தூரியை வீட்டில் இறக்கியுள்ளார்.

இவர் போட்டியாளரா அல்லது சிறப்பு விருந்தினரா என்ற என்ற குழப்பத்தில் இருந்த ஹவுஸ்மேட்ஸ், அவரும் சக போட்டியாளர் தான் என தெரிந்ததும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பொங்கல் சமைக்கும் டாஸ்க் ஒன்று தரப்பட்டது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். இந்த போட்டியில் கஸ்தூரியின் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. சமையல் அவ்வளவாக தெரியாத தர்ஷன் அணி வெற்றி பெற்றது.

பிக்-பாஸ் வீட்டிற்குள் வந்த போது எனக்கு நன்றாக சமையல் தெரியும் என்று கூறிய கஸ்தூரி இவ்வாறு தோல்வி அடைந்ததால், மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், கஸ்தூரி பொங்கல் செய்யும் போது அந்த அரிசியை கழுவாமல் செய்திருந்தார் என்பதே. இந்த சமையல் டாஸ்க் மூலம் தன் மீதிருந்த இமேஜை தானே டேமேஜ் செய்து கொண்டுள்ளார் கஸ்தூரி.

Advertisement