தமிழ்நாட்டு மாணவர்களால் பீதி அடைகின்றனர்! பிரகாஷ்ராஜ்க்கு கஸ்தூரி பதிலடி!

857

ராஜ்குமார் இயக்கத்தில் ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி,

‘தமிழகத்தில் வளர்ந்தவர்கள் தமிழகத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லியில் மட்டும்தான் வேலைக்கு செல்கிறார்கள், பதவியை பறித்துக்கொள்கிறார்கள் என்று இல்லை. நாடு முழுக்கவே தமிழர்கள் பணியாற்றுகிறார்கள்.

காரணம் தமிழர்கள் அறிவாளிகள். அவர்கள் திறமை
விஷயத்தில் வேறு மாநிலத்தவர்கள் அடித்துக் கொள்ள முடியாது. மே23-ந்தேதிக்கு பிறகு தமிழகம் தான் கிங் மேக்கராக திகழப்போகிறது.

அதைத் தெரிந்துதான் கன்னடக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்காக பேச தொடங்கியுள்ளனர். நாம் தலை நிமிர நிமிர மற்றவர்கள் பீதி அடையத் தான் செய்வார்கள்.

தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள்.

ஜெயிக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இந்த அகோரியும் அடுத்த காஞ்சனாவாக இருக்கும் என்று நம்புகிறேன்.  கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது பாகுபலிக்கு நிகரான காட்சிகளை உணர்ந்தேன்.’

இவ்வாறு கஸ்தூரி பேசினார்.

Advertisement