காரித்துப்பிய கஸ்தூரி! புதிய டுவீட்டால் பரபரப்பு!

1507

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகளை திரட்டி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்.

இவர் டெல்லி ரோட்டில் நடத்திய போராட்டங்கள் அனைத்துமே இந்தியா முழுவதும் பேசப்பட்டன. சமீபத்தில் மோடி போட்டியிடும் வாரணாசியில் தானும் போட்டியிட போகிறேன் என்று அய்யக்காண்ணு தெரிவித்திருந்தார்.

திடீரென அய்யாக்கண்ணுவை அமித்ஷா சந்தித்து பேசிய பின், மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். மேலும், மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரசும் திமுகவும் தான் என்று தெரிவித்தார்.

இதற்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் கஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,

“மோடிக்கு எதிராக விவசாயிகளை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் – அய்யாகண்ணு, கர்ர்ர்ர்ர்…தூ!”

என்று பதிவிட்டுள்ளார்.

இவர் யாரை இவ்வாறு காரித்துப்பியிருக்கிறார் என்று தெரியிவில்லை.

Advertisement