தோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி

1194

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக நேற்று அறிவித்தது. இந்த கூட்டண்யில் பாமக, பாஜக  ஆகிய கட்சிகள் வருகிறது. இந்த நிலையில்  பாமக கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.நடிகை கஸ்தூரி தற்போதெல்லாம் பொது விவகாரங்களிலும் தலையிட்டு டுவீட் போட்டு வருகிறார். ரஜினி தொடங்கி தமிழக அரசு, மத்திய அரசு, அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ஒரு கை பார்த்துவருகிறார்.

இவரது டுவீட்டுகள் பெரும்பாலும் நகைச்சுவையாக சிந்திக்கக் கூடிய வகையிலும் இருக்கும். அந்த வகையில் இன்றும் ஒரு டுவீட் போட்டுள்ளார்.

அந்த டுவீட்டில் அவர் கூறுகையில் எப்போதுமே பாமகவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் – வென்றது 1 மட்டுமே.

இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்? என்று பாமகவை கிண்டல் செய்துள்ளார்.

Advertisement