“எரியும் நெருப்பில் நெய் ஊத்துறாங்களே..” கஸ்தூரி போட்ட சர்ச்சை டுவீட்..! பொங்கியெழுந்த நெட்டிசன்கள்..!

550

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜனிகாந்த் கலந்து கொண்டு, பெரியார் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு, பெரியார் ஆதரவாளர்கள் பெரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும், இதற்கு ரஜினிகாந்த மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். பத்திரிக்கையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தான் நான் பேசினேன். எனவே என்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று தெரிவித்தார்.

இதனால் பெரியார் ஆதரவாளர்களும், ரஜினி ரசிகர்களும், மாறி, மாறி சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் ஒரு டுவீட் போட்டுள்ளார்.

அதில், பெரியார் ஜாதிக்கு எதிரானவர் என்று சொல்கிறார்கள். ஆனால், நான் பார்த்தவரை பெரியாரிஸ்ட்கள் ஒரு ஜாதிக்கு மட்டும் தான் எதிரானவர் போல் தெரிகிறது என்று தெரிவித்தார். இந்த டுவிட்டை பார்த்த நெட்டிசன்கள் பலரும், கஸ்தூரியை கடுமையாக விமர்சித்த வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of