கீர்த்திக்கு அடித்த ஜாக்பாட்! கவலையில் இருக்கும் இயக்குநர்கள்!

692

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் மட்டும், தமிழில் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சண்டக்கோழி 2’, ‘சாமி 2 ‘, ‘மகாநதி’, மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இதில் இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும், மகாநதி படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து வியர்ந்து தற்போது பாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், இயக்குநர் அமித் சர்மா இயக்கத்தில், போனிக் கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏற்கனவே ‘மகாநதி’ படத்திற்கு பின் கோடியில் உயர்ந்துள்ள இவரது சம்பளம், தற்போது பாலிவுட் பட வாய்ப்பும் கிடைத்து விட்டதால் அதை விட உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இவரை புக் செய்ய இருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of