ஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்!

823

திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து தரமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை சமந்தா.

இவர் தற்போது கொரிய மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற மிஸ் கிராணி படத்தின் ரீ-மேக்காக எடுக்கப்படும் ‘ஓபேபி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நந்தினி ரெட்டி என்பவர் இயக்கி வருகிறார்.

தற்போது படுவேகமாக நடந்து வரும் இப்படத்தில், பழம்பெரும் நடிகை லட்சுமி இணைந்துள்ளார். இவர் நடிகை ஐஸ்வர்யாராய், பிரசாந்த், நடித்த ‘ஜீன்ஸ்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு அழுத்தமான கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of