சின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்யும் நந்தினி! யார் தெரியுமா..?

4364

நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் நந்தினி. இவர் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் மைனா என்ற கதாபாத்திரம் மூலம் மேலும் பிரபலம் அடைந்தவர் இந்த நந்தினி.

இவர் 2 வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணமாகிய சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.

திடீரென நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மணஉளைச்சலுக்கு ஆளான நந்தினி, திரையுலகில் இருந்து தனித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது சீரியல்களில் அவர் நடிக்க ஆரம்பித்துள்ளார். மேலும் டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்து உள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.