தோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்வேன்! பேட்ட நடிகை!

554

கவுதம் மேனன் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சில காரணங்களால் அப்படம் வெளிவராத நிலை உள்ளது.

இதற்கிடையில் மேகாவுக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சிம்பு நடித்த வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வாவின் பூமராங் படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்த அவரிடம் விஜய், அஜித், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்தார்.

விஜய்யை பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்றும், அஜித்தை பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பேன். டோனியை நேரில் பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of