லாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..

1863

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் தீனா. இவர் நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ப.பாண்டி படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இதையடுத்து, கைதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, பெரும் பாராட்டையும் பெற்றார். தற்போது, மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on

இந்நிலையில், லாக்-டவுனால் வீட்டில் இருக்கும் நடிகர் தீனா, தனது வீட்டு வேலைகளை செய்து வருகிறார். மேலும், அவர் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், வீட்டில் இருக்கும் மாடுகளிடம் இருந்து பாலை கறந்துக்கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement