இப்படி தான் கணவர் வேண்டுமா? மனம் திறக்கும் ராகுல் ப்ரீத் சிங்!

83

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் ஸ்பைடர், தீரண் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

28 வயதாகும் இவர் தற்போது, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது கணவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு:-

“என்னை விட அவர் உயரமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி இருக்க வேண்டும். 90 சதவீத ஆண்கள் அந்த லிஸ்டில் இருக்க மாட்டார்கள்.

5 சதவீத பேர் ஏற்கனவே கமிட் ஆகியிருப்பார்கள். மீதி இருப்பதில் எனக்கு பிடிக்கும்படி இருக்க வேண்டும்.

என்னை அவர்களுக்கு பிடிக்க வேண்டும். இது போல பல சிக்கல்கள் உள்ளது”

இவ்வாறு ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.