சுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..

525

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சுஷாந்தின் நெருங்கிய தோழியும், நடிகையுமான ரியா மீது சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சுஷாந்த் சிங்கிடம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ரியா உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சுஷாந்த்தின் தந்தை அளித்துள்ள புகாரில் சுஷாந்துக்கு மனநல சிகிச்சை அளிப்பதாக கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ற ரியா, அவருக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து ரியாவிடம் பலர் கேட்டபோது, டெங்கு சிகிச்சைக்காக கொடுக்கப்படுவதாக பொய்யான தகவலை கூறியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement