பிக்பாஸ் 4 க்கு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த நடிகை சமந்தா..!

1518

இந்தியாவில் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த வண்ணமாய் உள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதே போல் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். வைல்ட் டாக் என்கிற படபிடிப்புக்காக நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான சமந்தா தொகுப்பாளராக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவருக்கு நடிகர் நாகார்ஜுனா வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமந்தாவை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் துள்ளி குதித்தனர். இன்னும் சில வாரங்களுக்கு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement