நீண்ட நாள் கனவு நிறைவேறியது! புதிர் வைக்கும் ஸ்ருதி!

280

நடிகை சுருதிஹாசன் தமிழில், சிங்கம் 3 படத்தில் நடித்த பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

சமீபத்தில் அவர் ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார்.

“என்னைப் பொறுத்தவரை அது நடந்துவிட்டது. என்ன நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேனோ கடைசியாக உண்மையாகி விட்டது.

தற்போதைக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லா நலன்களையும் இறைவன் எனக்கு அருளி இருக்கிறான்”

என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் சுருதி எதைப்பற்றி கூறுகிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. அவரே அதற்கு விடை கூறினால் தான் சுருதியின் சந்தோஷத்திற்கான காரணம் தெரியவரும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of