இந்த நடிகையை திருமணம் செய்ய ஆசையா? ஸ்ருதி ஓபன் டாக்!

765

தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக வந்திருக்கும்.

தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் குறிப்பிடும்போது, தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள்.

அவர் ஒரு நல்ல பெண். அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்று இருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன் என்றும் கூறினார்.

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார் என்றும், விரைவில் இவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of