“அதை வெளிப்படையாக சொல்ல எந்த வெட்கமும் எனக்கில்லை..” – நடிகை ஸ்ருதி ஹாசன்

536

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ருதி ஹாசன். கடைசியாக சிங்கம் 3 படத்தில் நடித்திருந்த இவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பல்வேறு முக்கிய நடிகர்களே கேலிக்கிண்டலக்கு ஆளாகும் நிலையில், ஸ்ருதி ஹாசன் அதற்கு விதிவிலக்கல்ல. அவரையும் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தன்னைப் பற்றிய கேலிக்கிண்டலுக்கு நடிகை ஸ்ருதி பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், என்னைப் பற்றி பிறர் கூறும் கருத்துகள் மூலம் என் வாழ்க்கையை நான் நடத்துபவரல்ல.

ஆனால், தொடர்ந்து அவள் குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்று தெரிவித்தார்.

மேலும், தனது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து அந்த பதிவில் கூறியிருந்த நடிகை ஸ்ருதி ஹாசன், ஆம்! நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

நான் இதனை விளம்பரப்படுத்துகிறேனா? இல்லை, நான் அதற்கு எதிரானவரா என்பதை நான் இங்கு தெரிவிக்கவில்லை. இவ்வாறானா வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of