பிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

3179

தமிழில் ஆனந்தம் படம் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த நடிகை சினேகா.

இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்த காலத்தில், அன்றைய இளைஞர்களின் மனைதை கொள்ளை அடித்தார் என்றே சொல்லலாம்.

இருப்பினும், தமிழ் சினிமா வழக்கப்படி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு அவருக்கு அம்மா வேஷம் அதிகம் தேடிசென்றது. ஆனால் அவரோ எனக்கு இன்னும் அவ்ளோ வயதாகவில்லை என அவற்றை மறுத்துள்ளார். இந்த சமயத்தில் அவர் தற்போது இயக்குனர் துரைசெந்தில்குமார்-தனுஷ் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் .

இந்த படத்தில் தனுஷ்க்கு இரட்டை வேடமாம். அதில் அப்பா தனுஷ்க்கு ஜோடியாகவும், மகன் தனுஷ்க்கு அம்மாவாகவும் நடிக்கிறார் சினேகா. இது ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of