சூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி..! நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..! அதிர்ச்சி காரணம்..?

1484

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது 7 சீசனும் முடிந்துள்ளது. இந்த சீசனில் பங்கேற்ற அனைவரும் மிகவும் பிரபலம் அடைந்தனர்.

குறிப்பாக, மூக்குத்தி முருகன் என்பவர் பாடல் பாடுவதிலும் சரி, பிரியங்காவுடன் செய்யும் காமெடி லூட்டிகளிலும் சரி மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் செய்யும் காமெடிகளுக்காகவே அந்த நிகழ்ச்சியை பலர் கண்டு களித்தனர்.

இவ்வாறு இருக்க இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூக்குத்தி முருகன், முதல் பரிசை வென்றார்.

இதுகுறித்து நடிகை ஸ்ரீ-பிரியா அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,

“விஜய் டிவி – சூப்பர் சிங்கர் பட்டம் எப்போதுமே பாடுவதில் திறமையானவருக்கு வழங்கப்படுவதில்லை என நம்புகிறேன். அந்த 5 போட்டியாளர்களில் புண்யாவும் விக்ரமும்தான் இசை ரீதியாக அற்புதத் திறமைகள்.

சத்யபிரகாஷ் வெற்றி பெறாத போதிலிருந்து போங்காட்டம் ஆரம்பமாகிவிட்டது. எப்போதாவது நியாயமா, சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த டுவீட்டிற்கு, அந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் பல்வேறு தரப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of