“உங்கள் இரண்டாவது கணவர்..” அமலாபாலை வெறுப்பேற்றிய ஸ்ரீ-ரெட்டி..!

672

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், சில வருடங்களில், இருவருக்கும இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இதற்கிடையே, ஏ.எல்.விஜய், மருத்துவர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், தனது இரண்டாவது திருமணம் குறித்து அமலா பால் மௌனம் காத்துவந்த நிலையில், அவர் இரண்டாவதாக திருமணமாகியது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

அதோடு இருவரும் உதட்டு முத்தம் கொடுத்த படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன. ஆனால் இதை மறுத்த அமலாபால், போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட படங்கள் தான் அவை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூலில், கவலைப்படாதீங்க அமலாபால், உங்கள் பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என பதிவிட்டு, அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of