அஜித் வசனம் பேசிய தமன்னா! கோரிக்கை வைத்த உதய்!!

543

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் தமன்னாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள்.

தமன்னாவின் கெரியர் முடிந்துவிட்டது அவர் யாராவது தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் நேரம் வந்துவிட்டது என்று அவ்வப்போது பேச்சுகள் எழுந்து வந்தது.

கெரியர் காலி என்று பேச்சு கிளம்பினாலோ, ட்வீட்டுகள் வந்தாலோ தமன்னாவுக்கு த்ரில்லாக இருக்குமாம். ஒருவரின் கெரியர் முடிந்துவிட்டது என்று யாராலும் கூற முடியாது.

நடித்தது போதும் என்று நான் என்று முடிவு செய்கிறேனோ அன்று தான் என் கெரியர் முடியும் என்கிறார் தமன்னா.

தமன்னா சொல்வதை பார்த்தால் விவேகம் படத்தில் அஜித் சொல்லியதை பின்பற்றுகிறாரோ? ( ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட… தோத்துட்ட…ன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது’).

ஆண்டுக்கு ஒரு முறையாவது சீனுராமசாமி படத்தில் நடிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தமன்னாவுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றினால் அவரின் கெரியருக்கு பக்கபலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement