காங்கிரஸில் களமிறங்க தயாராகும் “ரங்கீலா”

532

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல பிரபலங்கள் அரசியலில் களமிறங்கிவருகின்றனர், இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.

Rangeela

காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து உறுதி செய்தார்.

இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றும்படி வாழ்த்தினார். ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் மூலம் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பரப்பி, கட்சியை வலுப்படுத்தும் பணியில் நடிகை ஊர்மிளா ஈடுபடுவார் என்றார்.

ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of