”எலந்த பழம்” பாடல் புகழ் நடிகை விஜய நிர்மலா காலமானார்

818

பழம்பெரும் நடிகையும் இயக்கநருமான விஜய நிர்மலா, இன்று காலை ஐதராபாத்தில் இருக்கும் ஓர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக, விஜய நிர்மலா இயற்கை எய்தினார். அவருக்கு 75 வயது. அவரின் மகன், நடிகர் நரேஷ், இது குறித்த தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

தமிழில் வெளியான பணமா? பாசமா? என்ற படத்தில் நடித்த நடிகை விஜய நிர்மலா அந்த படத்தின் எலந்த பழம் பாடலின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அவரது மறைவு இந்திய திரையுலகில் மிகப்பெரும் இழப்பாக கருதப்படுகிறது. 

மேலும் அவர், தனது தாயாரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று கூறியுள்ளார். ஐதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் நாளை இந்த இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. 

Advertisement